News September 28, 2024
IPL 2025 : போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.
Similar News
News December 5, 2025
மதுரை மக்களுக்கு இதுதான் வேண்டும்: CM ஸ்டாலின்

மெட்ரோ ரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை தான் மதுரை மக்கள் கேட்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சர்ச்சையை குறிப்பிட்டு பதிவிட்ட அவர், ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …….. அரசியலா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’ என சூசகமாக மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். மதுரை மெட்ரோவுக்கான TN அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது. இன்று(டிச.5) 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹20 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹160 குறைந்து ₹96,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலையே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 5, 2025
ஆரம்ப கால ஜெயலலிதாவின் அரிய PHOTOS

மறைந்த Ex CM ஜெ.ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்கையை, அதிமுகவினர், புகைப்படங்களாக பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளனர். இதுதொடர்பான சில போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


