News January 12, 2025

IPL 2025: மார்ச் 23இல் தொடக்கம்

image

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை வெளியிட்டார்.

Similar News

News September 15, 2025

50% வரிவிதிப்பு குறையுமா? நாளை பேச்சுவார்த்தை

image

USA-வின் 50% வரிவிதிப்பு, இந்திய வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதனிடையே, வர்த்தகம் பற்றி இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், USA-வின் தலைமை பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரெண்டன் லின்ச், இன்று இரவு இந்தியா வரவுள்ளார். நாளை இந்தியா – USA இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வரி விதிப்பில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 15, 2025

வக்ஃபு வாரிய உத்தரவு: தவெகவுக்கும் கிடைத்த வெற்றி

image

புதிய வக்ஃபு வாரிய சட்டத்தில் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து இன்று SC உத்தரவிட்டது. இந்த தடையால், இதுதொடர்பான மற்ற மனுக்களுடன் தங்கள் தரப்பு மனுவுக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக தவெக தெரிவித்துள்ளது. இத்தடையின் மூலம் நீதி, சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் விதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக வாதிட்ட சட்டக்குழுவுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. சாதனை பெண் PHOTO

image

மகராஷ்டிராவில் பெண் ஒருவர் நேற்று <<17711542>>ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்<<>> பெற்ற செய்தி வைரலாகி வருகிறது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர் யார் தெரியுமா? 2021-ல் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் Halima Cissé என்பவர் ஒரே பிரசவத்தில், 5 பெண், 4 ஆண் என மொத்தம் 9 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

error: Content is protected !!