News March 21, 2025
IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
Similar News
News March 26, 2025
மம்முட்டிக்காக பூஜை: மத சர்ச்சையில் மோகன்லால்!

மம்முட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை செய்தார் மோகன்லால். ஆனால், மம்முட்டி ஒரு முஸ்லிம். அவருக்காக மோகன்லால் எப்படி இந்து கடவுளிடம் பூஜை செய்யலாம்? என ஒருதரப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த மோகன்லால், ‘மம்முட்டி எனது நண்பர். கடவுளிடம் வேண்டுவது என்பது எனது பெர்சனல். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
News March 26, 2025
ஏன் 28 நாள்கள் மட்டுமே ரீசார்ஜ் வேலிடிட்டி இருக்கிறது?

மாதத்தில் 30 அல்லது 31 நாள்கள் இருக்க, ஏன் 28 நாள் தான் ரீசார்ஜ் பிளான் இருக்கிறது? இதுவும் ஒரு பிசினஸ் ட்ரிக்ஸ் தான். 28 நாள் என்ற விதத்தில், 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால், 336 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், வருடத்தில் 365 நாள்கள் உள்ளது. பயனருக்கு 29 நாட்கள் குறையும். இதனால், வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிலை ஏற்படும். இது டெலிகாம் கம்பெனிகளுக்கு லாபம் தானே.
News March 26, 2025
‘மில்லினியம் பேபி’ மரணம்

சீனாவின் ‘மில்லினியம் பேபி’ என அழைக்கப்படும் 25 வயது ‘கிங்க்கியான்’ திடீர் இதய செயலிழப்பால் மரணம் அடைந்தார். 2000-ம் ஆண்டு பிறப்பின்போது, சரியாக புது ஆயிரமாண்டு (மில்லினியம்) தொடக்கத்தில் சீனாவில் பிறந்த முதல் குழந்தை என்று அப்போது உலகப் பிரபலம் ஆனார் கிங்க்கியான். சீன மொழியில் millinium என்பதை குறிப்பிடும் ‘கியான்’ என்ற சொல்லே அவரது பெயரானது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.