News March 21, 2025
IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
Similar News
News April 1, 2025
சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும். தொடர்ந்து வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி திறக்கப்பட்டு, மே 19ம் தேதி நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
News April 1, 2025
வலி என்றால் என்னவென்று காட்டுவேன்: டிரம்ப் வார்னிங்

USA கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், ஹவுதி குழுவுக்கும், ஈரானுக்கும் வலி என்றால் என்னவென்று காட்டுவேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2 வாரமாக நடந்து வரும் ஹவுதிக்கு எதிரான தாக்குதல் வெறும் சாம்பிள் தான் எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட முறை USA கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
News April 1, 2025
வணிக சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. GAS விலை மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.