News April 14, 2024
IPL 2024: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 3 வீரர்கள்

IPLஇல் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் (6 போட்டி) முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 10 விக்கெட்டுகளுடன் (5 போட்டி) 2ஆவது இடத்திலும், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 9 விக்கெட்டுகளுடன் (4 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News January 2, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை TN அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News January 2, 2026
தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 2, 2026
காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


