News May 12, 2024
IPL: சென்னை அணிக்கு 142 ரன்கள் இலக்கு

RR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த RR அணி, ரன் குவிக்க திணறி வந்தது. இதனால் ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பொறுப்புடன் விளையாடிய ரியான் பராக், 47 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி சார்பில், சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
Similar News
News September 8, 2025
சற்றுமுன்: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரில், சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி கோல் மழை பொழிந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா, முடிவில் 12-0 என வென்றது. நவ்னீத், மும்தாஸ் கான் ஹாட்ரிக் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 11-0 என வீழ்த்திய இந்தியா, நடப்பு சாம்பியன் ஜப்பானை 2-2 என டிரா செய்தது. இந்த தொடரில் கோப்பையை வென்றால் இந்தியா நேரடியாக WC-க்கு தகுதிபெறும்.
News September 8, 2025
ஒளியிலே தெரிவது தேவதையா..

ஜில்லாவின் தங்கையாய், சுயம்பு லிங்கத்தின் மகளாய் வசீகரித்த நிவேதா தாமஸின் போட்டோஸ் படுவைரலாகி வருகிறது. கடைசியாக தமிழில் ரஜினியின் மகளாக ‘தர்பார்’ படத்தில் நடித்தவரை அடுத்து எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். அவரின் போட்டோஸை பார்த்த ரசிகர்கள், ‘அவள் ஓணம் சேலையில் அலங்கரித்த வேளை.. அவளின் அழகில் மயங்கி நேரமும் மறந்தது நாளை!’ என கவிதை பாடி வருகின்றனர்.
News September 8, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தை போன்று வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹140-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹4 ஆயிரம் அதிகரித்துள்ளது.