News March 26, 2026
IPL டிக்கெட் விலை: ₹1 லட்சம்!

வரும் 28-ம் தேதி IPL தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் போட்டிகளுக்கான டிக்கெட்களை வாங்க முந்திக்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், வரும் 29-ம் தேதி நடைபெறும் MI- KKR போட்டிக்கான டிக்கெட் விலை ₹6,500 முதல் ₹50,000 வரை விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் MI- RCB போட்டிக்கான டிக்கெட் விலை ₹15,000- ₹1 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Similar News
News April 5, 2026
கிருஷ்ணகிரி: 8 வயது மகனுடன் தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே சந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (31) என்பவர், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில், நேற்று தனது 8 வயது மகனுடன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
News April 5, 2026
RBI தங்கம் கொள்முதல் பாதியாக குறைந்தது!

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.
News April 5, 2026
பரப்புரையை தொடங்குகிறார் அண்ணாமலை

பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இன்று முதல் அண்ணாமலை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். கோவை வடக்கு தொகுதியில், வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, நாளை அவிநாசி தொகுதியில் L.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.


