News March 16, 2025
IPL-க்கு நிதிஷ் ரெட்டி தயார்.. கிடைத்தது கிரீன் சிக்னல்

இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்தார். இதனையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை பெங்களூருவில் உள்ள NCA-வில் அவர் மேற்கொண்டார். தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றதாக மருத்துவக் குழு தெரிவித்ததையடுத்து, IPL போட்டி விளையாடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. விரைவில் SRH-வுடன் நிதிஷ் இணைகிறார்.
Similar News
News July 9, 2025
ஜூலை 10 முதல் டோல்கேட்டில் சிக்கும் TNSTC பேருந்துகள்

கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் TNSTC தங்களுக்கு சுமார் ₹276 கோடி நிலுவைத் தொகை வைத்திருப்பதாகவும், விரைவாக அதனை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை HCயில் மனுதாக்கல் செய்தனர். இதன் விசாரணையில், சம்மந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10 முதல் TNSTC பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
News July 9, 2025
ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.*நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது. *இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. *எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
News July 9, 2025
பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.