News April 4, 2026

IPL : இன்று MI Vs DC

image

IPL-ல், இன்று MI, DC அணிகள் டெல்லியில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதியதில் 21 முறை MI, 16 முறை DC வெற்றி பெற்றுள்ளன. பந்துவீச்சில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், பேட்டிங்கில் MI அணியே வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி ஆடுகளத்தில் MI வீரர்களின் அதிரடியை DC பவுலர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். யார் ஜெயிக்க வாய்ப்பு?

Similar News

News April 9, 2026

AK64 ஷூட்டிங்.. நாள் குறித்த அஜித்

image

இப்ப வருமோ எப்ப வருமோ என AK64 ஷூட்டிங் அப்டேட்டை எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. மே முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், கார் பந்தயங்களுக்கு இடையே ஷூட்டிங்கில் அஜித் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் கிடைக்காததால், புரோடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து தானே AK64 படத்தின் தயாரிப்பாளராக மாற அஜித் திட்டமிட்டுள்ளாராம்.

News April 9, 2026

காங்., சொல்லித்தான் விஜய்யை சந்தித்தேன்: பிரவீன்

image

பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்ததற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென காங்., கூறிவந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக தான் செய்த அனைத்தையுமே தலைமையின் ஒப்புதலை பெற்றே செய்ததாக பிரவீன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கட்சியின் நலனுக்காக தான் பலிகடாவாக மாற தயாராக இருந்ததாகவும், விஜய்யை சந்திக்கும்போது தன்னுடன் இன்னொரு அகில இந்திய தலைவர் இருந்ததாகவும் பேசியுள்ளார்.

News April 9, 2026

போர் விளைவு.. தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவிலேயே நீடிக்கிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 40 டாலர்கள் சரிந்து 4,710 டாலர்களுக்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மீண்டும் தொற்றிக் கொண்டதால் மேற்கு ஆசிய நாடுகளில் பலரும் தங்கத்தை விற்பனை செய்து வருவதே மீண்டும் இந்த விலைச் சரிவுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!