News April 17, 2024

IPL: போட்டியை தலைகீழாக மாற்றிய பட்லர்

image

KKR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஜோஸ் பட்லர் ஒற்றை ஆளாக போராடியுள்ளார். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு கடைசி 6 ஓவர்களுக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ஓவரிலும், 17, 17, 16, 18, 19, 9 என ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் பட்லர். கடைசி வரை களத்தில் நின்று வெற்றி கண்ட அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News April 30, 2025

மோடியின் திட்டம் இதுதான்..ராணுவ நிபுணர்கள்

image

J&K தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு PM மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ள நிலையில், இந்தியா முழு அளவிலான போரில் இறங்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர். போர் என்றால் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்றும், சிறு அளவிலான தாக்குதல்கள், ஸ்ட்ரைக்குகள் என்ற அளவிலேயே பதிலடி இருக்கும் என்கின்றனர். கடற்படை, விமானப்படையை விட ராணுவமே தாக்குதலில் பெரும்பங்கு வகிக்கும் என்கின்றனர். உங்க கருத்தென்ன?

News April 30, 2025

‘ஜனநாயகன்’ அப்டேட்: விஜய் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்!

image

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அரசியல் களத்திற்குள் நுழைந்த விஜய், சினிமா பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார். ‘ஜனநாயகன்’ தான் அவரது கடைசி படம் என்பதால், அதனை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விஜய் பிறந்தநாளில் புரோமோ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படம் 2026 ஜன.9-ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2025

அடுத்தடுத்த பாலில் 3 விக்கெட்! ஆனால் ஹாட்ரிக் இல்லை!

image

KKR இன்னிங்ஸின் 20-வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்ஸ் வீழ்ந்தன. DC-யின் ஸ்டார்க் வீசிய 3-வது பந்தில், ரோவ்மேன் பாவெல் LBW முறையில் அவுட்டாகினார். 4-வது பந்தில், அனுகுல் ராய் துஷ்மந்தா சமீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து, ராணா டிரைவ் ஷாட் ஆட, Non-Striker ஆன்ட்ரே ரசல், கடைசியில் ரன் அவுட்டாகினார். இது தனிநபர் ஹாட்ரிக் இல்லை என்ற போதிலும், DC ‘டீம் ஹாட்ரிக்’-ஐ நிகழ்த்தியுள்ளது.

error: Content is protected !!