News April 14, 2025
இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி..!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி 60% அதிகரித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024- 25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் (Turnover) ₹1.89 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஐபோன்கள் மட்டும் ₹1.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.
Similar News
News November 15, 2025
பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் இடைநீக்கம்

பிஹார் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற பாஜக இன்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பிஹாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தலைமை தெரிவித்துள்ளது. அதேபோல் அக்கட்சியின் MLC அசோக் அகர்வாலும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News November 15, 2025
பிக்பாஸ்: வாட்டர் மெலன் திவாகர் வெளியேறினார்

சர்ச்சைகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸில் கடந்த வாரம் பிரவீனும், துஷாரும் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி டைட்டில் வின்னராவர் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட கனி பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரெட் கார்டு மூலம் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News November 15, 2025
பணம் கையில் நிற்க வேண்டுமா? இதை பண்ணுங்க…

இந்திய நடுத்தர வர்க்கம் அதிகம் சம்பாதித்தாலும் ஏன் எப்போதும் பணப் பற்றாக்குறையிலேயே இருக்கிறது என்று தெரியுமா? நாம் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சில நிதி பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். உங்கள் நிதி கட்டுப்பாட்டை அதிகரித்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை மேலே SWIPE பண்ணி பாருங்க…


