News September 10, 2025
இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் விலை

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன் 17 இந்தியாவில் ₹82,900 விற்கப்படும். இதன் ஸ்டோரேஜ் வசதி 256GB. அதுவே 512GB ஸ்டோரேஜ் ஐபோன் ₹1,02,900க்கு கிடைக்கும். 256GB ஸ்டோரேஜ் உடைய ஐபோன் ஏர் ₹1,19,900க்கும், 512GB ஸ்டோரேஜ் ₹1,39,900க்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜ் ₹1,59,900க்கும் விற்கப்படவுள்ளது. ஐபோன் 17 ப்ரோ ஆரம்ப விலை ₹1,34,900 ஆகும். அதுவே 256GB ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ₹1,49,900க்கு விற்கப்படவுள்ளது.
Similar News
News March 16, 2026
கோவையில் ரத்து அறிவித்தார் கலெக்டர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிரியப்பனவர் அறிவிப்பு!
News March 16, 2026
OTD:சத்தில் சதம் அடித்த சச்சின்

யாரும் நெருங்க முடியாத சாதனையை சச்சின் படைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனைதான் அது. ஆசிய கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக 114 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். தற்போது விளையாடி வரும் வீரர்களில், விராட் கோலி (85) மட்டுமே அந்த மைல்கல்லை நெருங்கி இருக்கிறார்.
News March 16, 2026
முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தைப் பாதுகாக்க தக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.


