News September 10, 2025
iPhone 17 PRO: இந்தியாவை விட USA-ல் ₹38,000 குறைவு!

ஐபோன் 17 சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்த போன்களின் விலை நாடுகளுக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது. இந்தியாவில் iPhone 17 PRO-ன் விலை ₹1,34,900 ஆக இருக்கும் நிலையில், USA-ல் ₹96,870 ($1099), UAE-ல் ₹1,12,923 (AED 4,699), ஜப்பானில் ₹1,07,564 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன்கள் தயாராகும் நிலையில், விலையில் இவ்வளவு வித்தியாசம் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?
Similar News
News September 10, 2025
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை

பாஜகவின் அண்ணாமலை, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் 2-வது இடம் பிடிக்கலாம் எனத் தெரிவித்த அவர், தனித்து போட்டியிட்டால் வெற்றிபெறும் வலிமை பாஜகவுக்கு இல்லை என கூறியுள்ளார். அண்ணாமலையின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?
News September 10, 2025
எலான் மஸ்க் அல்ல, உலகின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்!

Oracle இணை நிறுவனர் லாரி எல்லிசன், எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ளார். Oracle-ன் காலாண்டு முடிவுகள் வெளியானதும், அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்தது. இதனால் லாரி எல்லிசனின் சொத்து மதிப்பு $393 பில்லியனாக அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு $385 பில்லியனாக உள்ள நிலையில், முதல்முறையாக நம்பர் 1 பணக்காரராக எல்லிசன் உருவெடுத்துள்ளார்.
News September 10, 2025
வீட்டில் இருந்தே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி இருக்கிறது. www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.