News October 6, 2024

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone 16 விரைவில் அறிமுகம்!

image

முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட iPhone 16 வரிசை ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, டெல்லி, மும்பை உள்ளிட்ட 4 நகரங்களில் பிரத்யேக விற்பனையகங்களைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் முந்தைய ரக iPhone-களைவிட, குறைவான விலையில் இந்த புதிய ரகம் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 19, 2025

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரை?

image

துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது INDIA கூட்டணி. இதற்காக, மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தியின் பெயரை பரிந்துரைத்துள்ளாராம் NCP-ன் சரத் பவார். அதோடு, கட்சி சார்பு இல்லாத முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய இறுதி முடிவை காங்., தலைவர் கார்கே இன்று எடுக்கவுள்ளார்.

News August 19, 2025

BREAKING: டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

image

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News August 19, 2025

‘திரை தீப்பிடிக்கும்..’ ஒரே படத்தில் ரஜினி, கமல்?!

image

தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?

error: Content is protected !!