News May 19, 2024

மெர்கட்டார் பெட்ரோலியத்தை கையகப்படுத்திய ஐ.ஓ.சி

image

மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை நாட்டின் முன்னணி பொதுத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) கையகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் கண்டுபிடிப்பு & தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம் கடந்த மாதம் திவாலானது. இதனையடுத்து, அதன் 100% பங்குகளை கையகப்படுத்த விண்ணப்பித்திருந்த ஐ.ஓ.சி நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலைப் பெற்று ₹148 கோடிக்கு வாங்கியுள்ளது.

Similar News

News March 14, 2026

சசிகலாவிற்கு புகழேந்தி வேண்டுகோள்!

image

புரட்சி அதிமுக என்ற கட்சியை நிறுவிய புகழேந்தி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் சசிகலா குறித்து பேசுகையில், 9 வருடங்களாக சசிகலா எங்கே சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினார். அவர் கட்சி துவங்கியிருப்பது நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்றவர், தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும்; தற்போது பேசிவிட்டு மீண்டும் அமைதியாகி மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதே தனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.

News March 14, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 14, 2026

ரவி மோகனுக்கு பதில் கேள்வி எழுப்பிய ஆர்த்தி

image

விவாகரத்துக்கு முன்பே கெனிஷா – ரவி இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். அவர் அண்மையில், பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஆண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது Ex மனைவி ஆர்த்தி, இதுவே விவாகரத்துக்கு முன் ஒரு பெண், வேறு ஒரு ஆணுடன் மேட்சிங் உடையில்சென்று, பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என கூறினால் இந்த உலகம் ஏற்குமா என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!