News March 4, 2025
IOB வங்கியில் வேலை டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை: ரூ. 15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 10, 2025
கோவில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்;பாஜக எச்சரிக்கை!

சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையாளருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதில் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வாங்கிக் கொண்டு அர்த்த மண்டபத்திற்கு பக்தர்கள் அனுமதிப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு உள்ளே விடுவதில்லை என்றும் இதனை உடனடியாக மாற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.
News November 10, 2025
ஏற்காட்டில் தங்கும் விடுதியில் விபரீத முடிவு!

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேஷ் குமார் (21). இவர் நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என ஊழியர்கள் சென்று பார்த்த போது, விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


