News March 4, 2025
IOB வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 19, 2025
இன்ஸ்டாகிராம் மோகத்தால் கோவையில் சோகம்!

கோவை சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கார் ஷோரூம் டிரைவர். இவரது மனைவி சங்கீதா (26). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சங்கீதா சினிமா பாடல்கள், வசனம், காமெடிகளை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனை கணவர் தினேஷ் குமார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 19, 2025
கோவைக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு!

கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போதிய மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
News November 18, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


