News March 4, 2025
IOB வங்கியில் வேலை டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை: ரூ. 15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 27, 2025
சேலம்: ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி!

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று 27.10.2025 ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். பொது சேவையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உறுதியெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 27, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் குறைதீர் முகாம்!

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.27) திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற வருகிறது. இதில் குடிநீர் வசதி, கல்லூரி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண தொகை மற்றும் இதர வசதிகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
News October 27, 2025
மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகளுக்கான பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினர். தங்கள் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் இல்லை என்றும், இந்த நிலையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும், இந்த உத்தரவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


