News October 25, 2024
டீ டோக்கன் கொடுத்து தவெக மாநாட்டுக்கு அழைப்பு

தவெக மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாட்டில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இலவச டீ டோக்கன் கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல பல பகுதிகளில் தவெக மாநாடு அழைப்பு வாசகம் பொறிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
Similar News
News December 25, 2025
செங்கல்பட்டு: பணியின் போது மயங்கி விழுந்து பலி!

திருப்போரூர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், நாகராஜ் (50) என்ற தொழிலாளி பணியின்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ரசாயன கசிவு காரணமாக அவர் இறந்தாரா அல்லது உடல்நலக் கோளாறா என்பது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.
News December 25, 2025
பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.


