News April 6, 2024

வெயிலால் லாபம் கண்ட முதலீட்டாளர்கள்

image

இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே கோடையில் அதிகம் விற்பனையாகும் பொருட்களின் நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்த வகையில் ஏசி, ஏர் கூலர், ஃபேன் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வாரத்தில் மட்டும் 8% ஏற்றம் கண்டுள்ளன. சோடா, ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் 6 சதவீதமும், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் 15% வரையிலும் ஏற்றம் கண்டுள்ளன.

Similar News

News February 4, 2026

‘டார்கெட் 50’ விஜய்யின் புதிய இலக்கு

image

TVK எடுத்த சர்வேயில் அக்கட்சிக்கு சென்னை முதல் வடமாவட்டங்கள் வரை மட்டுமே பலம் இருப்பதாக தெரியவந்துள்ளதாம். ஆகையால் அங்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, குறைந்தது 30-ல் வெற்றிபெற விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏனெனில், தொங்கு சட்டமன்றம் உருவானால் ஆட்சியை தீர்மானிக்கும் <<19011718>>கிங்மேக்கர்<<>> இடத்தை பிடிக்கலாம் என நம்புகிறாராம். ஆனால், பேட்டி ஒன்றில் கிங் ஆக விரும்புவதாக விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

News February 4, 2026

அண்ணாமலை விலகினார்.. பாஜகவில் பரபரப்பு

image

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது உள்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு <<19044945>>நயினார்<<>> விளக்கம் கொடுத்தாலும், பாஜக மாநில தலைவராக இருந்தபோது அதிமுகவை அண்ணாமலை தாக்கி பேசியதும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் முறிந்த ADMK – BJP கூட்டணி, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்த இறக்கிய பிறகு மீண்டும் இணைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

News February 4, 2026

65 கேட்கும் பாஜக… 25-க்கு கறார் காட்டும் அதிமுக

image

அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலேயே, கடந்த லோக் சபா தேர்தலில், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 12-ல் 2-ம் இடம் பெற்றிருந்தது. அதை சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்குகளால் பார்த்தால் 59 தொகுதிகளில் 2-வது இடமும், 64-ல் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இதை முன்னிறுத்தி 65 தொகுதிகளை பாஜக அதிமுகவிடம் கேட்டுள்ளதாம். ஆனால் 25 தொகுதிகளை மட்டுமே பாஜகவுக்கு தர அதிமுக தலைமை முன்வருகிறதாம்.

error: Content is protected !!