News November 25, 2024
முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே மிகுந்த ஏற்றம் கண்டிருக்கின்றன. தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி 357 புள்ளிகள் உயர்ந்து 24,264 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. ரிலையன்ஸ், HDFC வங்கி, ICICI வங்கி, லார்சன் ஆகிய நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. கடந்த வாரம் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகளும் இன்று ஏற்றம் கண்டிருக்கின்றன.
Similar News
News November 9, 2025
கோவை மாணவி கேங்க் ரேப்… அடுத்தடுத்து அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவி கேங்க் ரேப் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏர்போர்ட் பின்புறமுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் பாழடைந்த மோட்டார் அறையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரின் செல்போன்களை ஆய்வு செய்துவரும் போலீசார், மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். விசாரணை விரிவடையுமா?
News November 9, 2025
திரில் வேணுமா? இதை டிரை பண்ணுங்க!

சுவாரஸ்யமான மற்றும் சவாலான பயணங்கள் செய்ய ஆசையா? மனதை உற்சாகப்படுத்தும் டிரெக்கிங் பயணங்களை ட்ரை பண்ணுங்க. நேரம், தூரம், பாதை எல்லாம் சவாலாக இருக்கும். சிரமம் கூட சாகசமாக மாறும். நீங்க, உங்க நண்பர்களுடன் சேர்ந்து சாகசம் செய்ய, சில மலையேற்றங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
வாக்கு திருட்டை மூடி மறைக்கவே SIR: ராகுல் காந்தி

வாக்கு திருட்டை மூடி மறைக்கவும், அதை நிறுவனமயப்படுத்தவும் தான் SIR பணிகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி.,யில் பேட்டியளித்த அவர், ஹரியானா, பிஹார் போன்று மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கரிலும் இது நடந்துள்ளதாக நம்புவதாக கூறினார். வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் விரிவான தகவல்கள் உள்ளதாக தெரிவித்த ராகுல், அதை படிப்படியாக வெளியிடுவோம் என்று குறிப்பிட்டார்.


