News September 14, 2024
சீன நிறுவனங்களில் முதலீடு: காங்கிரஸ்

SEBI தலைவர் மாதபி புரி புச் சீன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக காங்கிரஸ் புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விதிகளை மீறி முறைகேடாக வருமானம் ஈட்டியதாக முன்பு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பிரதமருக்கு தெரியுமா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News January 4, 2026
இந்த இடத்துல தூங்கி எவ்வளவு நாளாச்சு..!

பஞ்சு மெத்தைகள் கிடையாது, தலை வைக்க தலையணைகளும் இல்லை, ஜில்லென்ற ஏசியும் இருக்காது, காதைக் கிழிக்கும் மின்விசிறி சத்தமோ இல்லை. ஆனாலும் அங்கு தூய காற்றுக்கு பஞ்சம் இருக்காது. பேசுவதற்கு ஏதுவாக குறைந்தது 4 பேராவது இருப்பார்கள். அப்படிப்பட்ட இடம் ஒவ்வொரு ஊரிலும் மரங்களுக்கு அடியிலோ (அ) கதவில்லாத கட்டடமாகவோ இருக்கும். இப்படிப்பட்ட ஓய்வறைக்கு உங்கள் ஊரில் பெயர் என்ன என்று கமெண்ட் பண்ணுங்க.
News January 4, 2026
BREAKING: மாணவர்களுக்கு நாளை மகிழ்ச்சி அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற இத்திட்டத்தில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் லேப்டாப் வழங்கப்படவுள்ளது.
News January 4, 2026
₹100 கோடி வசூலுடன் நிவின் பாலியின் மாஸ் கம்பேக்!

‘பிரேமம்’ மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நிவின் பாலி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தன. இந்நிலையில், அகில் சத்யன் இயக்கிய ‘சர்வம் மாயா’ படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் நிவின்!
மோகன்லாலின் ‘விருஷபா’ படத்துடன், கடந்த 25-ம் தேதி ரிலீசான இந்த திரைப்படம், 10 நாள்களில் ₹100 கோடி வசூலை குவித்து அசத்தியுள்ளது.


