News August 20, 2024

செபி தலைவர் மாதபியிடம் விசாரணை!

image

செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய நிதித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவில் செபியின் பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. இருப்பினும், மாதபியின் கட்டுப்பாட்டில் உள்ள செபியின் பிரதிநிதிகள் விசாரணையில் ஈடுபட்டால், உண்மை மறைக்கப்பட வாய்ப்புள்ளதாக, பலரும் சந்தேகிக்கின்றனர்.

Similar News

News April 3, 2026

அமித்ஷா சொல்லி கட்சி ஆரம்பித்த விஜய்: அப்பாவு

image

விஜய்யை பின்தொடர்வது சினிமா கூட்டம் என்று அப்பாவு விமர்சித்துள்ளார். அக்கூட்டமானது வடிவேலு, விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு கூடும் கூட்டம் என்றும், அது வாக்குகளாக மாறாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமித்ஷாவின் தூண்டுதலின் பெயரில்தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாகவும், தவெகவுக்கு போடும் ஒரு ஓட்டு என்பது பாஜகவுக்கு போடும் இரட்டை ஓட்டுக்கு சமம் என்று அவர் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

BREAKING: இரவில் விஜய்க்கு அதிர்ச்சி

image

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.5-ல் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக ரோடு ஷோ நடத்தவும் & 23 இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவும் போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் முன்னதாக (ஏப்.4-ல்) வில்லியனூர் சந்திப்பு உள்ளிட்ட 4 பகுதிகளில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அத்துடன் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்திருப்பதால் விஜய் அதிர்ச்சியில் உள்ளாராம்.

News April 3, 2026

புதிய கருத்துக்கணிப்பு.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி

image

Republic டிவி தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும், அதனால் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கே அதிக பாதிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!