News June 27, 2024
Byju’s நிறுவனத்தின் மீது விசாரணை தொடர்கிறது

Byju’s நிறுவனம் ₹28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்ததால், அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக, அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், நிதிமோசடி விவகாரத்தில் Byju’s அரசால் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இச்செய்தி தவறானது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

தற்போது 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவுள்ளது. இந்நிலையில், டிச.12-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால், உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
விமான கட்டணத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயம்

இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை 10 மடங்கு வரை அதிகரித்தன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், குறிப்பிட்ட பயணங்களுக்கு தகுந்த டிக்கெட் விலையை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என, விமான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது, விமான போக்குவரத்து சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News December 6, 2025
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்

பிக்பாஸ் தமிழில் ரம்யா, அரோரா, ஆதிரை, வியானாவை தவிர 11 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், unofficial Voting-ல் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் சுபிக்ஷா எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஒருவேளை டபுள் எவிக்ஷனாக இருந்தால் , கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. வேறு யார் வெளியேற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


