News March 18, 2024

அவசர வழக்காக விசாரணை

image

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

Similar News

News November 7, 2025

பிஹாரில் அதிகபட்சமாக 64.66% வாக்குப்பதிவு

image

பிஹாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI அறிவித்துள்ளது. இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. SIR நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம் என தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

News November 7, 2025

விளையாட சென்றவர் பிணமாக திரும்பினார்… சோக மரணம்!

image

உ.பி., ஜான்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரின் அகால மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த 30 வயது ரவீந்திரா, சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, ‘அப்பா நான் விளையாடப் போறேன்’ சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றிருக்கிறார். சில ஓவர்கள் பவுலிங் செய்துவிட்டு தாகத்துக்கு தண்ணீர் குடித்தவர், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இப்படியா முடிவு வரணும்!

News November 7, 2025

ராசி பலன்கள் (07.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!