News August 12, 2024

ஹிட்லருக்கு பின் ரஷ்யாவுக்குள் உக்ரைன் ஊடுருவல்

image

ரஷ்யாவுக்குள் 30 KM தூரம் உக்ரைன் படைகள் ஊடுருவி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்தது முதல் தடுப்பு சண்டையில் ஈடுபட்ட உக்ரைன், முதல்முறையாக தற்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் ஊடுருவியுள்ளது. 2ஆம் உலகப் போரில் ஹிட்லர் படைகள் ஊடுருவியபிறகு, ரஷ்யாவிற்குள் நடைபெறும் முதல் ஊடுருவல் இதுவே. உக்ரைன் ராணுவத்தை விரட்ட ரஷ்ய படைகள் குவிக்கப்படுகின்றன.

Similar News

News March 6, 2026

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

<<19303686>>காவலாளி அஜித் குமார்<<>> மரண வழக்கில் மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களின் பெயர்களை CBI சேர்த்திருந்தது. இந்நிலையில், மார்ச் 12 வரை அந்த 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை சிபிஐ எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

இதுதான் என்னுடைய கனவு.. ஸ்டாலின் சொல்கிறார்

image

TN முழுவதுமே சமத்துவபுரமாக மாறவேண்டும், எங்கும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இவை அனைத்தும் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல்திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், இது மு.க.ஸ்டாலின் கொடுக்கும் உறுதிமொழி என்றார். மேலும், TN-ன் இந்த வளர்ச்சி பயணத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

News March 6, 2026

UPSC தேர்வு முடிவுகள் வெளியானது

image

நாடு முழுவதும் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடத்தையும், அகன்ஷ் துல் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். UPSC தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை <>கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!