News March 19, 2024
IPL-இல் ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் அறிமுகம்

2024 ஐபிஎல் தொடரில், ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் (Smart Replay System) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 3ஆவது நடுவரை துல்லியமாகவும் வேகமாகவும் முடிவெடுக்க உதவும். போட்டியில் ரிவியூ கேட்கும் போது, 3ஆவது நடுவர் அவுட்டா? இல்லையா? என்று பொறுமையாக பார்த்து சொல்ல வேண்டும். அதற்கு அதிக நேரம் எடுப்பதால், இந்த புது வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புகைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.
Similar News
News September 6, 2025
நீரவ் மோடி, மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் மும்முரம்

நிதி மோசடி குற்றவாளிகளை நாடு கடத்தும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அதிகாரிகள் குழு, சமீபத்தில் திஹார் சிறையில் ஆய்வு செய்தனர். நீரவ் மோடி, மல்லையா UK-க்கு தப்பியோடிய நிலையில், இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை நாடுகடத்துவதற்கு பிரிட்டன் கோர்ட் தயக்கம் காட்டியது. இந்நிலையில், சிறப்பு வசதி செய்து தருவதாக பிரிட்டன் குழுவிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
News September 6, 2025
GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.
News September 6, 2025
முடி கருகருன்னு அடர்த்தியா வளர இந்த எண்ணெய் போதும்

நோயில்லாத வாழ்க்கைக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். SHARE.