News March 23, 2024
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.
Similar News
News April 29, 2025
ட்ரம்ப் எதிர்ப்பால் வென்ற மார்க் கார்னி

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?
News April 29, 2025
அதே மணம்.. பூஜா ஹெக்டே கிளாஸிக் லுக்

சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
News April 29, 2025
அடைமொழிகளில் நம்பிக்கை இல்லை: அஜித்

பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.