News March 21, 2024
குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு

குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு முடிந்து வருகிறது. இதில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு இன்று 3ம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் விவரங்களை பதிவு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
Similar News
News September 18, 2025
₹3.28 லட்சம் விலை குறைத்த கார் நிறுவனம்

GST மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன. அந்த வகையில், SKODA கார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. அதன்படி, Kodiaq மாடல் ₹3.28 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Kylaq – ₹1.19, Slavia – ₹63,000, Kushaq – ₹61,000 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு வரு 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
News September 18, 2025
மாற்று என்றவர்கள் மறைந்து போனார்கள்: MK ஸ்டாலின்

திமுகவிற்கு மாற்று என்று இப்போதும் சிலர் பேசிக் கொண்டிருப்பதாக விஜய்யை, ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர், மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் மாறி போனதாகவும் மறைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றும் மாறாத திமுக, தமிழக மக்கள் மனதிலிருந்து மறையவில்லை என்றும் கூறியுள்ளார். நம் கொள்கைதான் நமது பலம் என்ற அவர், இதுவே தமிழ்நாடு Politics என்றார்.
News September 18, 2025
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: PM

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா அஞ்சாது என PM மோடி கூறியுள்ளார். நம் சகோதரிகளின் குங்குமத்தை அகற்றிய பாக். பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்ததாகவும், இந்திய ஆயுதப் படைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத தாயின் பாதுகாப்புக்கு நாடு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் PM குறிப்பிட்டார்.