News January 31, 2025

450 சேனல்களுடன் இன்டர்நெட் டிவி.. BSNL அசத்தல்

image

பொதுத்துறை நிறுவனமான BSNL புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், 450 சேனல்களுடன் இன்டர்நெட் டிவியை BSNL அறிமுகம் செய்துள்ளது. BiTV என்ற பெயரில் இதை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. BSNL போர்ட்டலில் OTT PLAY மூலம் இச்சேவையை இலவசமாக பெறலாம் எனவும் கூறியுள்ளது.

Similar News

News March 2, 2026

அதிகார பகிர்வில் உறுதியாக இருக்கிறோம்: திருமா

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை முதன்முதலில் முன்னெடுத்ததே விசிகதான் என திருமாவளவன் கூறியுள்ளார். இன்னும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், TN அரசியல் அதற்கு இன்னும் கனியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தங்களை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு என்றால் தற்போது அதிக தொகுதிகளை கேட்பதுதான் எனவும், தொகுதி பங்கீடு வலிமைக்கு ஏற்ப அமையவேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

News March 2, 2026

மாதவிடாய் வலியை போக்க சூப்பர் டிப்ஸ்!

image

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும், மன உளைச்சலையும் போக்க சில பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழை, பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு ஆகிய பழங்கள்தான் அவை. வாழைப்பழத்தின் மெக்னீசியம், மாதவிடாய் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. பப்பாளியின் விட்டமின் A, ஹார்மோன் சமநிலையை காக்கிறது. ஆப்பிளின் நார்ச்சத்தும், இரும்பு சத்தும் சோர்வு, மனநிலை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

News March 2, 2026

37 மணி நேரம் பயணித்து தாக்கிய US விமானங்கள்!

image

US-ன் ‘B-2 Spirit Stealth Bomber’ விமானங்கள், ஈரானின் பூமிக்கடியில் இருக்கும் ஏவுகணை மையங்களை குறிவைத்து தாக்கி அழித்திருப்பதாக US அறிவித்துள்ளது. ஈரான் அருகிலுள்ள தங்கள் விமான தளங்களை பயன்படுத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், மிசோரியில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொண்டு, சுமார் 37 மணி நேரம் பறந்து இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!