News May 2, 2024
11,113 பள்ளிகளில் இணையதள வசதி

தமிழகத்தில் உள்ள 11,113 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
பிப்.1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய FM அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கு தேவையான திட்டமிடல்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.
News January 30, 2026
சற்றுமுன்: மதுபானங்களின் விலை குறைகிறது

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீர் மீதான வரி 110% -யிலிருந்து 60% ஆக குறைக்கப்படலாம் எனவும் Premium Wine மீதான 150% வரி 130% ஆக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைக்கப்பட்டால் மது விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
News January 30, 2026
இன்ஸ்டாவில் Re-entry கொடுத்த கோலி!

இன்று காலை முதலே <<18998100>>கோலியின் <<>>இன்ஸ்டா ID, ‘User not found’ என வந்ததால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர் இன்ஸ்டாவை விட்டு வெளியேறிவிட்டாரோ என பலரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், தற்போது அக்கவுண்ட் மீண்டும் Activate ஆகியுள்ளது ரசிகர்கள் உற்சாகமடைய செய்துள்ளது. அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? அவராகவே வெளியேறினாரா என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.


