News March 17, 2024
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘ரசமலாய்’

உலகின் சிறந்த சீஸ் இனிப்பு உணவு வகைகளின் பட்டியலை ‘டேஸ்ட் அட்லஸ்’ (Taste Atlas) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ‘ரசமலாய்’ 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் போலந்து நாட்டின் ‘செர்னிக்’ (Sernik) உணவு இடம்பிடித்துள்ளது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய ரசமலாய், பெங்காலி இனிப்பு உணவாகும். முற்றிலும் பாலை வைத்தே செய்யப்படும் இது, பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு உணவாகவும் உள்ளது.
Similar News
News January 12, 2026
விசா இல்லாமல் சுற்றி வர ஆசையா?

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடுகளை விசா இல்லாமல் சுற்றிப் பார்க்க ஆசையா? விசா தேவையில்லை என்பதால், பணம் மற்றும் நேரத்தை சேமிக்கலாம். டென்ஷன் இல்லாமல் பறந்து சென்று ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம். அந்த வகையில், என்னென்ன நாடுகளுக்கு விசா தேவையில்லை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 12, 2026
OFFICIAL: ‘பராசக்தி’ வசூல் இவ்வளவு கோடியா..!

‘ஜன நாயகன்’ வெளியாகாததால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான SK-வின் ’பராசக்தி’ 2 நாளில் ₹51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையிலும், முதல் நாளில் ₹27+ கோடி, 2-வது நாளில் ₹24+ கோடி வசூல் செய்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், இப்படம் ₹100 கோடியை கடக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
News January 12, 2026
அண்ணாமலை பாஜகவில் ஜீரோ தான்: ஆதித்யா தாக்கரே

தேர்தலில் தோற்று டெபாசிட் கூட வாங்க முடியாத <<18833393>>அண்ணாமலை<<>>, மும்பையை பற்றி எங்களுக்குச் சொல்கிறாரா என சிவசேனா (UBT) கட்சியின் MLA ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஜீரோ தான். ஆனால் அவர் அடுத்த PM போல நடந்துகொள்கிறார் என்றும், மகாராஷ்டிராவை அவமதித்த அண்ணாமலை மற்றும் பாஜகவை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


