News March 28, 2025
சர்வதேச அங்கீகாரம் பெற்ற படம்.. இந்தியாவில் தடை

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான சந்தோஷ் என்ற படம் ஆஸ்கர் விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரிட்டிஷ் – இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கி இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. சில காட்சிகளை நீக்க படக்குழு மறுத்ததால் தடை விதிக்கப்பட்டது.
Similar News
News January 3, 2026
ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

காலையில் குறைந்த <<18753027>>தங்கம்<<>>, வெள்ளி விலைகளில் மாலையில் சிறிது மாற்றம் ஏற்றப்பட்டுள்ளது. காலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹4,000 குறைந்திருந்தது. ஆனால், மாலையில் ₹1,000 உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய தினம் வெள்ளி 1 கிலோ ₹3,000 குறைந்து, ₹2.57 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் மட்டும் வெள்ளி விலை ₹28,000 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 3, 2026
தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை EPS வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 7-ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கும் பயணம் சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை என பயணித்து, 20-ம் தேதி சென்னை மண்டலத்தில் முடிவடைகிறது. அனைத்து தரப்பு பிரதிநிதிகளின் தேவைகளையும் அறிந்து தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க நிர்வாகிகளை EPS அறிவுறுத்தியுள்ளார்.
News January 3, 2026
SA அணிக்கு 301 ரன்கள் டார்கெட் நிர்ணயித்த இந்தியா

தென்னாப்பிரிக்கா U19 அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், இந்திய அணி 300 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினாலும், அடுத்து வந்த ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்களையும், RS அம்ப்ரிஷ் 65 ரன்களையும் விளாசியதால் டீசண்டான ஸ்கோர் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க பவுலர் JJ பேசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.


