News October 15, 2025

International Roundup: 9 பேரை கொன்ற இஸ்ரேல்

image

*வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது USA நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். *மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *அமைதி ஒப்பந்தத்தை மீறி 9 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு நோபல் பரிசு அறிவித்ததை அடுத்து, நார்வேயில் உள்ள தூதரகத்தை அந்நாடு மூடியது. *கிராமி விருது வென்ற USA பாடகர் டி ஏஞ்செலோ (51) கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார்.

Similar News

News October 15, 2025

‘லவ் டுடே 2’ அப்டேட் கொடுத்த பிரதீப்

image

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைக்கு நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், வருங்காலத்தில் ‘லவ் டுடே 2’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். வரும் 17-ம் தேதி அவர் நடித்த ‘டியூட்’ ரிலீசாகும் நிலையில், டிச.18-ல் ‘LIK’ ரிலீசாகிறது.

News October 15, 2025

வருமானத்தைப் பெருக்க இத பண்ணுங்க..

image

பொறாமைப்படுபவர்களின் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க, கைப்பிடியளவு உப்பும், 5 கருமிளகையும் எடுத்து கொள்ளவும். முதலில் உங்கள் தலையை 3 சுற்று வலது புறமாக சுற்றுங்கள். அடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சுற்றவும். சுற்றும்போது கடன் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிவிட்டு உப்பையும், மிளகையும் கொட்டாங்குச்சியில் போட்டு எரித்து விடவும். SHARE.

News October 15, 2025

தங்கம் விலை ₹3,500 வரை குறையும்

image

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1960 உயர்ந்து ₹94,600-க்கு விற்பனையானது. இந்த விலையுடன் மேக்கிங் சார்ஜ் & GST உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால், ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு பண்டிகை கால சலுகையாக தங்கம் இறக்குமதி வரியை 6%லிருந்து 2%ஆகவும், நகைகளுக்கான GST-ஐ 3%லிருந்து 1.5%ஆக குறைத்தால், சவரனுக்கு ₹3,500 வரை குறையும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!