News February 26, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: NOC கிடைத்தது

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இதையடுத்து, மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய தமிழக விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியில் 20.72 ஏக்கரில் மைதானம் அமைய உள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
Similar News
News February 27, 2025
ராசி பலன்கள் (27.02.2025)

மேஷம் – செலவு, ரிஷபம் – முயற்சி, மிதுனம் – புகழ், கடகம் – அலைச்சல், சிம்மம் – சிக்கல், கன்னி – சினம், துலாம் – பரிசு, விருச்சிகம் – சிந்தனை, தனுசு – கவனம், மகரம் – தடங்கல், கும்பம் – பக்தி, மீனம் – ஓய்வு.
News February 27, 2025
பாக். கிரிக்கெட் வீரர் பஹார் ஜமான் ஓய்வு பெற முடிவு

உடல்நல பிரச்னை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியுடன் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் பஹார் ஜமான், ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் ஓய்வு முடிவை அவர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2017 CT இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான அவரின் சதமே பாக்., பட்டம் வெல்ல காரணமாக அமைந்தது.
News February 27, 2025
தாய் மொழியை காக்க போராடும் மாநிலங்கள்

பஞ்சாப் மாநிலத்தில் CBSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு தீவிரமாக அமல்படுத்தி வரும் நிலையில், மாநில அரசுகள் தங்கள் மாநில மொழியை கட்டாயமாக்கி வருகின்றன.