News April 23, 2025
சர்வதேச புத்தக தினம்

புத்தக வாசிப்பும், படிப்பும் மட்டுமே சமூகத்தை பண்படுத்தும் என்பது சான்றோர் வாக்கு. அதனை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி சர்வதேச புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகங்களில் எதை படிக்க வேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அனைத்தையும் படிக்கலாம். நல்ல புத்தகங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மோசமான புத்தகங்கள் எப்படி வாழக்கூடாது என்பதையும் கற்றுத்தரும்.
Similar News
News October 14, 2025
BREAKING: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, அக்.20 அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளையே வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
News October 14, 2025
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது. இந்நிலையில், 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. DCM சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு DCM விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 9 பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
News October 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. நாளை ரெடியா இருங்க!

சுமார் 1.15 கோடி பேருக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 தவணையாக ₹1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், 26-வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீதான கள ஆய்வையும் அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படும். SHARE IT.