News October 27, 2024
SBI வங்கிக்கு சர்வதேச விருது

2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக SBI-ஐ, அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களை ஒட்டி நடைபெற்ற 31ஆவது ஆண்டு வங்கி விருது வழங்கும் விழாவில், SBI இந்த விருதைப் பெற்றது. உலகளவில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 20, 2026
பாஜக தேசிய தலைவரின் சொத்து மதிப்பு இதுதான்!

பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு ₹3.08 கோடி மதிப்பிலான சொத்துகளும், ₹56 லட்சம் கடனும் உள்ளது. மேலும், அவரது மனைவியிடம் ₹60,000 ரொக்கமாகவும், வங்கி கணக்கில் ₹98 லட்சமும் உள்ளதாம். அவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகலா? Clarity

தவெகவில் இருந்து <<18908935>>செங்கோட்டையன்<<>> விலக உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், விஜய்யுடனான தனது நெருக்கம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் தன் மீது சகோதர பாசத்துடன் உள்ளதாகவும், தனது கஷ்டங்களை உணர்ந்து கைகொடுத்தவர் என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்துக்கும், தனக்கும் இடையே சிறிய இடறல்கூட இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
News January 20, 2026
ரஜினியை இயக்கும் சுதா கொங்கரா?

‘பராசக்தி’ படத்தின் கதைக்களத்திற்காக ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக சுதா கொங்கரா கூறியுள்ளார். அப்போது, அவருக்காக தான் எழுதிய காதல் கதை பற்றி கேட்டறிந்ததாகவும், ஆனால் முழுக் கதையை விவரிக்கவில்லை என்றும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இது சாத்தியமானால், பல வருடங்களுக்கு பிறகு ரஜினியை ROM-COM படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?


