News April 7, 2024
ஹாய் நான்னா படத்துக்கு சர்வதேச விருது

நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ஹாய் நான்னா படத்துக்கு மார்ச் மாதத்துக்கான சிறந்த சர்வதேச திரைப்பட விருது கிடைத்துள்ளது. தந்தை, மகள் பாச உறவை வைத்து டிச. 7இல் ஹாய் நான்னா வெளியானது. மேலும் ஹாய் டாட் என்ற பெயரில் உலகம் முழுவதும் படம் வெளியிடப்பட்டது. அந்த படத்துக்கு ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 1, 2026
Budget 2026: 1 ரூபாயில் மத்திய அரசுக்கு கிடைத்த வரவு

FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு எவ்வளவு வரவு கிடைக்கும் என 1 ரூபாயில் கணக்கிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ➤கார்ப்பரேஷன் வரி – 18 பைசா ➤கடன்களின் வசூல் – 24 பைசா ➤வரி அல்லாத வருவாய் – 10 பைசா ➤கடன் அல்லாத மூலதன ரசீதுகள் – 2 பைசா ➤வருமான வரி -21 பைசா ➤கலால் வரி -6 பைசா ➤GST & பிற வரிகள் – 15 பைசா ➤சுங்கம் – 4 பைசா என மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
News February 1, 2026
Budget 2026: 1 ரூபாயில் மத்திய அரசு செய்துள்ள செலவு

2026-27 பட்ஜெட்டில் 1 ரூபாயில் மத்திய அரசால் செய்யப்படும் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ➤வரிகளில் மாநிலங்களின் பங்கு – 22 பைசா ➤ஓய்வூதியம் – 2 பைசா ➤நிதி ஆணையம் – 7 பைசா ➤மத்திய அரசு திட்டங்கள் – 17 பைசா ➤மாநில அரசு திட்டங்களின் மத்திய அரசின் பங்கு- 8 பைசா ➤ராணுவம் – 11 பைசா ➤முக்கிய மானியங்கள் – 6 பைசா ➤வட்டி – 20 பைசா ➤பிற செலவுகள் – 7 பைசாவை மத்திய அரசு செலவழித்துள்ளது.
News February 1, 2026
BIG NEWS: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 நாள்களில் தலைகீழாக குறைந்துள்ளது. கடந்த ஜன.30-ல் 1 அவுன்ஸ் $5,500 ஆக இருந்த தங்கம் இன்று $4,893 ஆக உள்ளது. $607 (₹55,651) குறைந்ததன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து டாலர் பக்கம் திரும்பியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாம்.


