News June 27, 2024

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்

image

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

BJP வேட்பாளராக களமிறங்கும் சோனியா காந்தி

image

கேரளாவின், மூணாறு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் BJP வேட்பாளர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஏனெனில் அவரது பெயர் சோனியா காந்தி. உள்ளூர் காங்கிரஸ் தலைவரான இவரது தந்தை, சோனியா காந்தி மீதான அன்பு, மரியாதையின் வெளிப்பாடாக அவரது பெயரை மகளுக்கு சூட்டியுள்ளார். எதிர்காலத்தில் சோனியா காந்தியின் அரசியல் பயணம் பாஜகவை நோக்கி இருந்துள்ளது. இவர் வெற்றி பெறுவாரா என்பது டிச.13-ம் தேதி தெரியவரும்.

News December 3, 2025

டிசம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1884– இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள். *1971-இந்தியாவின் விமானப்படை தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், INDO-PAK போர் ஆரம்பித்தது. *1984–போபால், நச்சு வாயு கசிவு விபத்தில் 3,800 மக்கள் உயிரிழப்பு. *1979–ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் மறைந்த நாள். *1998–கவிஞர் முடியரசன் மறைந்த நாள்.

News December 3, 2025

இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா

image

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக 70 பேர் கொண்ட மருத்துவ குழுவை IAF C-17 விமானத்தில் இந்தியா அனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கையில் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக இலங்கை அரசு மட்டுமின்றி சனத் ஜெயசூர்யா உள்ளிட்ட பிரபலங்களும் நன்றி கூறியுள்ளனர்.

error: Content is protected !!