News June 14, 2024
எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வர முடியாத பிடியாணையை நேற்று பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 17 வரை எடியூரப்பாவை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
Similar News
News March 24, 2026
ராஜ்யசபா சீட்டை குறிவைக்கும் விசிக

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் விசிக உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி இலக்கு குறித்த தீர்மானம் கவனம் பெற்றுள்ளது. அதன்படி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், 2028-ல் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டும் விசிக பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விசிகவின் இரட்டை இலக்க சீட் ஆசை நிறைவேறுமா?
News March 24, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 24, பங்குனி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 24, 2026
கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்!

➤கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ➤உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவது அவசியம். ➤இரவில் பனங்கற்கண்டு கலந்து பால் அருந்தினால் உடல் சூடு தணியும். ➤பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ➤கண்களின் நலனுக்கு பப்பாளி பழம் சாப்பிடலாம்.


