News August 2, 2024

ரிசர்வ் வங்கியில் பணிபுரிய விருப்பமா?

image

ரிசர்வ் வங்கியில் கிரேட் ‘பி’ பிரிவு அதிகாரிகள் பதவிக்கான 94 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் <>opportunities.rbi.org.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடிப்படை ஊதியமாக ₹55,220 முதல் ₹99,750 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். கூடுதலாக அகவிலைப்படி, இதர கொடுப்பனவு சேர்த்து சுமார் ₹1.22 லட்சம் வரை மாத சம்பளமாக கிடைக்கும்.

Similar News

News August 7, 2025

75% வருகை கட்டாயம்: CBSE

image

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவேட்டை கொண்டிருப்பது அவசியம் என CBSE தெரிவித்துள்ளது. இந்த வருகை பதிவுகளை கொண்டிருக்காத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், அவசரநிலை, மெடிக்கல் எமெர்ஜென்ஸி, தேசிய / சர்வதேச போட்டிகளால் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு 25% தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News August 7, 2025

டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

image

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.

News August 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 7 – ஆடி 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை.

error: Content is protected !!