News April 30, 2024

கடன் தொகை வழங்கிய பிறகே வட்டியைக் கணக்கிட வேண்டும்

image

வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளில் இருந்து, கடனுக்கான வட்டியைக் கணக்கிடக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறதோ, அந்த நாளில் இருந்துதான் கடனுக்கான வட்டியைக் கணக்கிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வங்கிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Similar News

News August 27, 2025

விஜய்க்கு வெளிநாட்டில் இருந்து வந்த அதிர்ச்சி

image

இந்தியாவுக்கு மீண்டும் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என விஜய் அண்மையில் கூறியிருந்தார். இதுபற்றி பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும், கச்சத்தீவு இன்று மட்டுமில்லை என்றும் இலங்கையின் ஒரு பகுதி என்றார். தமிழகத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் வாக்குகளை பெற இதைப்போன்ற கருத்துகள் கூறப்படுவதாகவும் விமர்சித்தார்.

News August 27, 2025

40 நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டம்

image

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், இந்தியாவின் ஜவுளித்துறை தான் மிக அதிகமாக பாதிக்கப்பட உள்ளது. இதை சரிசெய்ய ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்பட 40 நாடுகளுக்கு டெக்ஸ்டைல் ஏற்றுமதியை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தரம், நிலைத்தன்மை, புதுமையுடன் இந்திய டெக்ஸ்டைல் பொருள்கள் இருக்கும் என்ற உறுதியுடன் 40 நாடுகளுடன் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

News August 27, 2025

இந்தியாவில் மீண்டும் காமன்வெல்த் போட்டி?

image

2030 காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமை கோருதலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவின் விண்ணப்பத்தை CommonWealth Games Federation ஏற்றால் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்திட ஒப்பந்தம், நிதி குஜராத்திற்கு வழங்கப்படும். இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள். இதற்கு முன்பாக இந்தியாவில் 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது.

error: Content is protected !!