News April 10, 2025
வீட்டு கடன்கள் மீதான வட்டி 8%க்கும் கீழ் குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி தொடர்ந்து குறைக்கப்படுவதன் எதிரொலியாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8% கீழ் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டியை 2 முறை தலா 25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. எனினும், வங்கிகள் இன்னும் 8.15%க்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. அது வரும் நாள்களில் குறையக்கூடும் எனத் தெரிகிறது.
Similar News
News January 10, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 576
▶குறள்:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
▶பொருள்: ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
News January 10, 2026
நெதன்யாகுவை US கடத்த வேண்டும்: பாக்., அமைச்சர்

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோவை அமெரிக்கா தனது காவலில் எடுத்தது போல், இஸ்ரேல் PM நெதன்யாகுவையும் கடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்தில் நம்பிக்கை இருந்தால் US இதைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். துருக்கியும் அவரை கடத்த முடியும் என குறிப்பிட்ட அவர், நெதன்யாகுவை விட ஒரு பெரிய குற்றவாளியை உலகம் பார்த்ததில்லை என்றும் சாடினார்.
News January 10, 2026
கொலை வழக்கில் MLA விடுதலை

கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA தளி ராமச்சந்திரனை விடுதலை செய்து, கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு பாஸ்கர் என்பவரை கொலை செய்ததாக தளி MLA ராமச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


