News June 17, 2024
வீடு, வாகன கடனுக்கான வட்டி உயர்ந்தது

MCLR எனப்படும் நிதி அடிப்படையிலான கடனுக்கான வட்டியை 0.10% உயர்த்தியது SBI. நாட்டின் முன்னணி வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், MCLR கடனுக்கான வட்டியை தற்போது உயர்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடன் வாங்கியோரின் மாதத் தவணை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
Similar News
News April 13, 2026
11+ அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு: தமிழிசை

திமுகவினர் எப்போதும் பொய் மட்டுமே பேசுவார்கள் என மக்களிடம் கேட்டுப் பார்த்தாலே தெரியும் என்று தமிழிசை கூறியுள்ளார். மயிலாப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், 11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவித்தார். இத்தகைய முறைகேடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனில் NDA கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 13, 2026
CM சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட FM

நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு <<19635853>>நிறுத்தச் சொன்னதாக ஸ்டாலின்<<>> குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஜன.9-ல் TN தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு குற்றச்சாட்டு உண்மையில்லை என நிர்மலா நிரூபித்துள்ளார். மேலும், தொகையை குறைக்க சொன்னது கட்டாய உத்தரவு இல்லை எனவும், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசல் உருவாக்குவதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News April 13, 2026
பழிவாங்க வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் காங்கிரஸ்

வேளச்சேரியில் உள்ள தனது இல்லம், அனுமதி இல்லாமல் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கை நாராயணன் குற்றம் சாட்டியுள்ளார். காங்.,சில் இருந்து விலகி, TN காங்., தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், குறிவைத்து தனது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பதாகவும், நுழைவாயிலில் குப்பை வீசப்பட்டதாகவும் கூறினார். இது திட்டமிட்ட செயல், உடனே அதை அகற்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.


