News April 17, 2024
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைய தாமதமாகும்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வட்டி விகித குறைப்பு நடவடிக்கை மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவெல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பணவீக்க விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 சதவீதத்திற்குள் தொடர்ந்தால் மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதனால் இந்தியாவிலும் ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளது.
Similar News
News April 10, 2026
காட்பாடியில் போராடுகிறாரா துரைமுருகன்?

2021-ல் காட்பாடியில் திமுகவின் துரைமுருகன், அதிமுகவின் ராமுவை விட 746 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றியை தக்க வைத்தார். இத்தொகுதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள், 10.5% இட ஒதுக்கீடு உரிமை குறித்து துரைமுருகன் ஒருமுறை கூட ஆதரித்து பேசவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்களாம். இளம் வாக்காளர்களும் விஜய், சீமான் பக்கம் சாய்வதால், இம்முறை துரைமுருகன் கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
News April 10, 2026
தர்பூசணி விலை மளமளவென குறைந்தது

தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதற்கு இதமாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி ஆகியவற்றை மக்கள் நாடுகின்றனர். அதற்கேற்றார்போல் தர்பூசணி வரத்தும் சந்தைகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் 1 கிலோ தர்பூசணி ₹12 – ₹15 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் 1 கிலோ ₹20 – ₹25 வரையே விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்பூசணி ஜூஸும் ₹20-க்கே சில இடங்களில் கிடைக்கிறது.
News April 10, 2026
கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கனிமொழி ஏன் மவுனம் காக்கிறார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


