News April 9, 2025

லோன் வாங்கியோரின் வட்டி குறைகிறது

image

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6 சதவீதமாக அறிவித்திருக்கிறது RBI. இதனால், வங்கிகளில் கடன் வாங்கும் மக்களின் வட்டியும் குறைவாக விதிக்கப்படும். மேலும், வீட்டுக்கடன் வைத்திருக்கும் மக்களின் வட்டியும் குறையும் வாய்ப்புள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்திருப்பதால் ரெபோ வட்டியை படிப்படியாக ரிசர்வ் வங்கி குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 1, 2025

60% ஊழியர்களை நீக்கும் MPL

image

ஆன்லைன் கேமிங் நிறுவனமான மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. <<17543188>>ஆன்லைன் கேமிங் தடை சட்ட மசோதா<<>> தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.

News September 1, 2025

கிரிக்கெட்டில் அஸ்வினின் அடுத்த பயணம்

image

துபாயில் நடைபெறும் ILT20 போட்டிகளில் அஸ்வின் விளையாடவுள்ளார். சமீபத்தில் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ILT20 தொடரில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதில் விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்க அஸ்வினை பல அணிகள் அணுகியுள்ளன. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ILT20-ல் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, யூசப் பதான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 2-ம் தேதி ILT20 தொடங்குகிறது.

News September 1, 2025

‘பைசன்’ முதல் சிங்கள் நாளை வெளியீடு

image

‘பைசன்: காளமாடன்’ படத்தின் முதல் பாடல் ‘தீக்கொளுத்தி’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக, துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’, ‘மகான்’ படங்கள் ஹிட் ஆகாத நிலையில், இப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

error: Content is protected !!