News July 24, 2024
இன்று முதல் அமலுக்கு வரும் வட்டி விகித உயர்வு

வங்கி வைப்பு (FD) தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக HDFC வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹3 கோடிக்கும் குறைவான மொத்த டெபாசிட்டுகளுக்கு 20 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கப்படவுள்ளது. இதன் விளைவாக, FDஇல் பொதுப் பிரிவினர் அதிகபட்சமாக 7.40% & மூத்த குடிமக்கள் 7.90% வட்டியைப் பெறுவார்கள். இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Similar News
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக் வங்கிக் கணக்கில் ₹13,000

காங்., ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவில் ஒரு சவரன் தங்க நகை, வங்கிக் கணக்கில் ₹13,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் MP-ஆக தேர்வாகும் நிலையில், மிகவும் ஏழ்மையான MP என்ற பெருமையை பெறுவார். 2019-ல் MP ஆன ராஜஸ்தானின் சிகாரைச் சேர்ந்த 67 வயதான சுமேதா நந்த் சரஸ்வதி (₹34,311) நாட்டின் மிகவும் ஏழ்மையான MP என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை தெரிவிக்கிறது.
News March 5, 2026
ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி..

பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு பீரியடுக்கு பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
News March 5, 2026
தமிழக தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை <<19301081>>வரும் 13-ம் தேதி<<>> ECI அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் இம்முறை ஏப்ரலில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது.


