News June 18, 2024
ஸ்டேட் பேங்கில் FD திட்டங்களுக்கான வட்டி உயர்வு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், FD திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி, 180 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்புத் தொகைக்கான வட்டியை 0.25% அதிகரித்துள்ளது. இதனால், 180 நாள்கள் முதல் 210 நாள்களுக்கான வட்டி 6%இல் இருந்து 6.25%ஆகவும், 211 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான நாள்களுக்கான வட்டி 6.25%இல் இருந்து 6.50%ஆகவும் அதிகரித்துள்ளது.
Similar News
News March 17, 2026
சிவகங்கை: நிலம் வாங்க போறீங்களா.? பத்திரபதிவு FEES.!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு<
News March 17, 2026
பெட்ரோல், டீசல்.. சற்றுமுன் அறிவிப்பு வெளியானது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பெட்ரோலிய துறை துணை செயலாளர் சுஜாதா, பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவு இருப்பதால் மக்கள் பீதியில் அதிகளவு வாங்கி சேமிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து வணிக LPG நுகர்வோரும் PNG-க்கு மாற வேண்டும் என்றார்.
News March 17, 2026
CINEMA 360: மீண்டும் தளபதி காம்போ!

*சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில் ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம் *H.வினோத்- சூர்யா காம்போவில் விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளதாம் *மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது *‘அரசன்’ படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம் *பைனான்ஸ் பிரச்னையால், ரவி மோகன் – SJ சூர்யா நடிக்கும் படம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.


