News April 16, 2025
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பு அமலுக்கு வந்தது

கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI ) அடிப்படை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது. இதனால் அந்த வங்கியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டியை அடிப்படை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Similar News
News April 19, 2025
‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘<
News April 19, 2025
விரைவில் அமைச்சரவையில் மாற்றமா?

உளவுத்துறை ரிப்போர்ட்டை தொடர்ந்து அமைச்சர் <<16144954>>பொன்முடியை <<>>நேரில் அழைத்து கடிந்துக்கொண்ட ஸ்டாலின், நடவடிக்கைக்கு கட்டுப்படுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம் என பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் வரவுள்ளதால் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், திமுகவின் பேச்சாளர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.
News April 19, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶ நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது ▶உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது ▶கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் ▶எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் ▶வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.