News March 18, 2024
நாமக்கல்லில் தீவிர சோதனை
பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. நேற்று திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனிடையே நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய இரண்டுக்கும் 5, 58, 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
“துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை”
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
News November 19, 2024
அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள ஆய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.